தமிழ்நாடு

மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் சிலையை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!

சென்னை மாதவரத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் வெங்கலச் சிலையை திறக்க அனுமதிப்பது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் சிலையை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாதவரம் கொசப்பூரில் உள்ள தனது நிலத்தில் நிறுவப்ப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறக்க அனுமதிக்கக்கோரி தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எம்.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனி நபர் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிலைகளை வைத்துகொள்ள அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற பிறப்பித்த தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தாக்கல் செய்யப்பட்டது.

மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் சிலையை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!

தனி நபரின் பட்டா நிலத்தில் சிலை வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தாலும், மாநில அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலை வைக்க கூடாது என ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கபப்ட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தமிழக அரசின் அரசாணை மற்றும் சிலை திறக்க அனுமதிப்பது தொடர்பாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories