தமிழ்நாடு

ஆடு மேய்ந்த விவகாரம்: பட்டியலின முதியவரை காலில் விழச் செய்த ஆதிக்க சாதியினர்... கயத்தாறில் கொடூரம்!

கயத்தாறு அருகே ஆதிக்க சமூகத்தினரின் ஆட்டு பட்டியில் ஆடு சென்றதால் பட்டியல் இனத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்த கொடூரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆடு மேய்ந்த விவகாரம்: பட்டியலின முதியவரை காலில் விழச் செய்த ஆதிக்க சாதியினர்... கயத்தாறில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சார்ந்தவர் பால்ராஜ் (55). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரின் ஆடு பக்கத்தில் ஆடு வைத்திருக்கும் சிவசங்கு (60) என்பவரின் ஆட்டு பட்டிக்கு சென்றிருக்கிறது.

உடனே சிவசங்கு அவரது உறவினர்களை அழைத்து பால்ராஜை காலில் விழுந்து கும்மிட செய்துள்ளார். மேலும் இதனை வீடியோ எடுத்து அவர்களின் உறவினர்களின் உதவியோடு சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பால்ராஜ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் ஆடு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவரின் ஆட்டு பட்டிக்கு சென்றதால் உரிமையாளரை காலில் விழுந்து கும்பிட செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, காலில் விழ செய்தது தொடர்பாக பால்ராஜ் கயத்தார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் சிவசங்கு, சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது கயத்தார் காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories