காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிக்கையில், வடகிழக்கு வங்கக் கடலில் வருகிற 20ஆம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதனால் காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் வருகிற 21ஆம் தேதி வரை அந்தமான், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.