தமிழ்நாடு

பயணச்சீட்டுக்கு பதில் QR CODE; மாஸ்க் அணியாவிடில் அனுமதியில்லை: மெட்ரோ ரயில் சேவைக்கான புது கட்டுப்பாடு!

மெட்ரோ ரயில் பயண சீட்டை முற்றிலும் தொடுதல் இல்லாத பயணச்சீட்டு அறிமுகம் செய்துள்ளது சென்னை மொட்ரோ நிர்வாகம்.

பயணச்சீட்டுக்கு பதில் QR CODE; மாஸ்க் அணியாவிடில் அனுமதியில்லை: மெட்ரோ ரயில் சேவைக்கான புது கட்டுப்பாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் தற்போது செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், பொது போக்குவரத்து, மெட்ரோ, கடைகள் திறப்பு நேரம், வணிக வளாகங்களுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்க இருக்கிறது. இதற்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், நடைபாதைகளில் தனிமனித இடைவெளிக்கான ஏற்பாடுகளை செய்தல் பணிகளில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

பயணச்சீட்டுக்கு பதில் QR CODE; மாஸ்க் அணியாவிடில் அனுமதியில்லை: மெட்ரோ ரயில் சேவைக்கான புது கட்டுப்பாடு!

இது தொடர்பாக மெட்ரோ ரயில் பொது மோலாளர் பிரதீப் யாதவ் பேசுகையில், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அப்படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல் மெட்ரோ ரயில் பயண சீட்டை முற்றிலும் தொடுதல் இல்லாத பயணச்சீட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயலியில் பதிவிறக்கம் செய்து பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளும் புதிய முறையை தற்போது மெட்ரோ ரயில் அறிமுகம் செய்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணம் செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் டோக்கன்கள் முறையிலிருந்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வோரு முறையும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு டோக்கனை மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார்.

தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இருக்கைகளை மாற்றியமைத்தல், அடிக்கடி கைப்பிடிகள் மற்றும் கம்பிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது ஒலிக்கச் செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன், மெட்ரோ நிர்வாகம் சார்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சில பொது மாற்றங்களும் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டுக்கு பதில் QR CODE; மாஸ்க் அணியாவிடில் அனுமதியில்லை: மெட்ரோ ரயில் சேவைக்கான புது கட்டுப்பாடு!
பயணச்சீட்டுக்கு பதில் QR CODE; மாஸ்க் அணியாவிடில் அனுமதியில்லை: மெட்ரோ ரயில் சேவைக்கான புது கட்டுப்பாடு!
பயணச்சீட்டுக்கு பதில் QR CODE; மாஸ்க் அணியாவிடில் அனுமதியில்லை: மெட்ரோ ரயில் சேவைக்கான புது கட்டுப்பாடு!
பயணச்சீட்டுக்கு பதில் QR CODE; மாஸ்க் அணியாவிடில் அனுமதியில்லை: மெட்ரோ ரயில் சேவைக்கான புது கட்டுப்பாடு!

முன்னதாக, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பொருத்தமான நேரம் மாற்றம் செய்யப்படும்.

சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையேயான சேவை செப்டம்பர் 7ம் தேதியும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் இடையேயான சேவை 9ம் தேதியும் தொடங்கப்படும் என வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த வியாழன் அன்று மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டிருந்தது.

banner

Related Stories

Related Stories