தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில் தமிழகத்தில் மத மோதல்களை உண்டாக்க இந்துத்வா கும்பல்கள் முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக ஒரு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட கருத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் இந்துத்வா கும்பல்கள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தொடர்புப்படுத்தி பல்வேறு அவதூறுகளை வீசி வந்தனர்.
ஆனால் பிரச்சனை பெரிதாக்க நினைத்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல்கள் தலைவர்களின் சிலைகளை அவமரியாதை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடத் துவங்கின. இந்நிலையில் தமிழக அரசியல் சூழல் குறித்து தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கலந்துக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல்களின் திட்டமிட்டு பரப்பபடும் பொய் பிரச்சாரத்தை தோலுரித்துக் காட்டினார். மேலும் கொரோனா தோல்வியை மறைக்க அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டினார்.
ஆ.ராசாவின் கருத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களின் ட்ரெண்டிங் ஆனது. இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் ஆ.ராசாமீது தனிநபர் தாக்குதல் நடத்த தொடங்க ஆரம்பித்தனர்.
அதன் ஒருபகுதியாக, கோவையைச் சேர்ந்த பா.ஜ.க இளைஞரணியின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் ஆ.ராசா பற்றி இழிவான கருத்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ஏ.பி.முருகானந்தம் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என பலரும் கூறிவந்த நிலையில், தி.மு.க சார்பில் வழக்கறிஞர்கள் இன்று கோவை போலிஸ் கமிஷனரிடம் ஆ.ராசா பிறப்பை வைத்து இழிவாக கருத்து தெரிவித்த பா.ஜ.க இளைஞரணியின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளனர். விரைவில் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏ.பி.முருகானந்தம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.