தமிழ்நாடு

“RSS பாடம் நடத்துவதுதான் புதிய கல்விக் கொள்கை” - விளாசும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

புதிய கல்விக் கொள்கை திட்டம் என்ற பெயரில் பா.ஜ.கவின் கொள்கைகளை புகுத்த சர்வாதிகாரப்போக்கை மத்திய அரசு கடைபிடிப்பதாக பொன்முடி எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.

“RSS பாடம் நடத்துவதுதான் புதிய கல்விக் கொள்கை” - விளாசும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விழுப்புரத்தில் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சரும் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான க.பொன்முடி எம்.எல்.ஏ காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

முன்னதாக பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை திட்டம் என்ற பெயரில் பா.ஜ.கவின் கொள்கைகளை புகுத்த சர்வாதிகாரப்போக்கை மத்திய அரசு கடைபிடிப்பதாக பொன்முடி எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ, “புதிய கல்விக் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கையை புகுத்த கொண்டுவரப்பட்ட திட்டம். பா.ஜ.க அரசு மக்களுக்கு எதிராகவே உள்ளது. மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூட்டாட்சித் தத்துவத்தை கைவிட்டு ஒற்றையாட்சித் தத்துவத்தை நோக்கிச் செல்கிறது.

இந்தியாவில் தமிழகத்தில்தான் மிகச்சிறந்த கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தலைவர் கலைஞர் அவர்களும், இன்றைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

“RSS பாடம் நடத்துவதுதான் புதிய கல்விக் கொள்கை” - விளாசும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்து கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் வாய்ப்பு பெற சிறப்பான திட்டம் ஏற்படுத்தித் தந்தவர் கலைஞர்.

ஆனால், 60 சதவீத கிராமப்புற மாணவர்களை புறக்கணிக்கும் விதமாக புதிய கல்விக் கொள்கை உள்ளது. இருமொழிக் கொள்கையை ஒழித்து மும்மொழிக் கொள்கையை கொண்டுவர முயல்கிறது பா.ஜ.க அரசு. இது இந்தி மொழியை திணிப்பதற்காகவே கொண்டு வரப்படும் திட்டமாகும்.

மாநில அரசுக்குக் கல்வி உரிமையை வழங்கினால்தான் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் எது தேவை என முடிவெடுக்க முடியும். புதிய கல்விக் கொள்கை மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கையில் பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவையில்லை; தன்னார்வலர்கள் பாடம் நடத்துவார்கள் என்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் காரர்களை வைத்து பாடம் நடத்துவோம் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார்களா?

ஆன்லைன் மூலமும், தொலைக்காட்சியிலும் பாடம் நடத்துகிறோம் என்று சொல்வது மாநில அரசின் இயலாமையை காட்டுகிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தக் கல்விக் கொள்கைக்கு வழக்கம்போல பணிந்து போகாமல் மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories