தமிழ்நாடு

“இட ஒதுக்கீடு பிரச்னையில் முழுமுயற்சி எடுத்த மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியமானது” : கே.பாலகிருஷ்ணன்

இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“இட ஒதுக்கீடு பிரச்னையில் முழுமுயற்சி எடுத்த மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியமானது” : கே.பாலகிருஷ்ணன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இட ஒதுக்கீடு பிரச்னையில் முழுமுதல் முயற்சி எடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பங்கு மிக முக்கியமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “இட ஒதுக்கீடு தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் மூன்று மாத காலத்தில் மத்திய அரசு 3 பேர் கொண்ட குழு அமைத்து சட்டம் இயற்றவேண்டும் எனக் கூறியுள்ளது. இதில், அவ்வளவு கால அவகாசம் தேவையில்லை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. எனவே மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

“இட ஒதுக்கீடு பிரச்னையில் முழுமுயற்சி எடுத்த மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியமானது” : கே.பாலகிருஷ்ணன்

மேலும் இந்த இட ஒதுக்கீடு பிரச்னை ஏற்பட்ட உடனேயே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முழுமுதல் முயற்சி மேற்கொண்டு வழக்கு தொடர்ந்து போராட வேண்டுமென அனைத்து கட்சிகளையும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் அனைத்து கட்சிகளும் வழக்கு தொடுத்து தற்போது இதில் வெற்றியும் கிட்டியுள்ளது.

இந்த வெற்றிக்கு முதல் வித்திட்டவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இந்த இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது என புகழாரம் சூட்டினார்.

மேலும், அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீமும் பட்டியலின மக்களுக்கு 19 சதவீதம் என 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறும் வரை தொடர்ந்து மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க தலைமையில் முயற்சிகள் மேற்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories