தமிழ்நாடு

“OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் உண்மையில் என்ன நிலைப்பாடு?” : இரட்டைவேடம் போட்டு ஏமாற்றும் பா.ஜ.க!

OBC இடஒதுக்கீடு வழக்கில் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு, பொதுவெளியில் தீர்ப்பை வரவேற்று பா.ஜ.க இரட்டைவேடம் போடுதை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளது சட்டப்பஞ்சாயத்து இயக்கம்.

“OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் உண்மையில் என்ன நிலைப்பாடு?” : இரட்டைவேடம் போட்டு ஏமாற்றும் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு, பொதுவெளியில் பா.ஜ.கவின் நிலைப்பாட்டால்தான் இத்தீர்ப்பு கிடைத்தது என்று பா.ஜ.க இரட்டைவேடம் போடுதை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளது சட்டப்பஞ்சாயத்து இயக்கம்.

இதுதொடர்பாக சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு :

OBC இடஒதுக்கீடு வழக்கில் மத்திய பா.ஜ.க அரசின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் (Affidavit) தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கோரியிருந்த OBC இடஒதுக்கீட்டிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு, பொதுவெளியில் பா.ஜ.கவின் நிலைப்பாட்டால்தான் இத்தீர்ப்பு கிடைத்தது என்று இரட்டைவேடம் போடுகிறது பா.ஜ.க.

இரட்டைவேடத்தை எடுத்துக்காட்ட, தீர்ப்பிலிருந்து சில பத்திகள் :

பக்கம் 63, பத்தி 24ல், இவ்ஒதுக்கீடானது பெருவாரியான மக்களுக்கு, மருத்துவ சமுதாயத்திற்கு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வாதத்தை முன்வைக்கிறது மத்திய அரசு. ( "... 24. It is submitted that if these writ petitions are allowed, medical admissions across India would get greatly affected and interest of the medical community and the public at large would be greatly affected..)

“OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் உண்மையில் என்ன நிலைப்பாடு?” : இரட்டைவேடம் போட்டு ஏமாற்றும் பா.ஜ.க!

பக்கம் 63 : பத்தி 25 : பொதுநலன் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு OBC ஒதுக்கீடு கோரும் இம்மனுவானது தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு கோருகிறது. (25. It is submitted that in larger public interest too,this batch of writ petitions deserve to be dismissed,to prevent anomalous situations and confusions from arising in medical admissions in India"..

இப்படி, OBC ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துவிட்டு, அனைத்துக்கட்சிகளின் மனுவையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதாடிவிட்டு “... மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு தரப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தமிழக பா.ஜ.க அறிக்கை வெளியிட்டிருப்பது பா.ஜ.கவின் “இரட்டை வேடம்” மற்றும் “பச்சைப்பொய்யை” தெளிவாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

செந்தில் ஆறுமுகம்
செந்தில் ஆறுமுகம்

உண்மையிலேயே, OBC இடஒதுக்கீடு குறித்து பா.ஜ.கவிற்கு அக்கறை இருக்குமானால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு, விளக்கம் கேட்டு வழக்கு என இழுத்தடிக்காமல் OBC இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த முன்வரவேண்டும். 3 மாதங்கள் காத்திருக்காமல், விரைந்து செயல்பட்டால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்க்கையில்கூட இதனைச் செயல்படுத்த வாய்ப்புள்ளது. செய்யுமா பா.ஜ.க?”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories