தமிழ்நாடு

நோயாளிகளுக்குப் படுக்கை வசதி செய்து தர லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை ஊழியர் - கொரோனா காலத்தில் அவலம்!

தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து தர லஞ்சம் பெற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.

கணேசன் (லஞ்சப் புகாரில் சிக்கியவர்)
கணேசன் (லஞ்சப் புகாரில் சிக்கியவர்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் படுக்கை கிடைப்பதற்கும் சாப்பாட்டுக்கான டோக்கன் பெறுவதற்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி செய்து தருவதற்கு லஞ்சம் பெறுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் பெயர் பதிவு செய்யும் பணியில் இருப்பவர் கணேசன். இவர் படுக்கை வசதி வேண்டும் என்று கேட்கும் நோயாளிகளிடம் ரூ.50 லஞ்சமாகப் பெறுவதாகப் பல புகார்கள் வந்தும் நடவடிக்கையில்லாமல் இருந்துள்ளது.

நோயாளிகளுக்குப் படுக்கை வசதி செய்து தர லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை ஊழியர் - கொரோனா காலத்தில் அவலம்!

இந்தநிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதி கேட்கும் ஒரு நோயாளியிடம் பெயர் பதிவு செய்யும் பணியிலிருந்த கணேசன் ரூ.50 லஞ்சமாக வாங்கி அதை அருகில் உள்ள மற்றொரு பணியாளரிடம் கொடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நடவடிக்கை என்ற பெயரில் கணேசன் மட்டும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவர் இதேமாதிரியான லஞ்ச புகாரில் ஏற்கனவே சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories