ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மாவட்ட எல்லையான லட்சுமி நகர் சோதனை சாவடியில் ஈ.பாஸ் இன்றி வரும் வாகனங்களை கண்டறிய சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல்துறை சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
அப்போது சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த காரை ஆய்வு மேற்கொண்ட போது, காரில் வந்த அ.தி.மு.க பிரமுகர் சந்திரசேகர் காவல் துறையினர் மீது மோதுவது போன்று கார் தாறுமாறாக வந்ததால் வழிமறித்த காவலர்கள் சிதறி ஒடினர்.
அ.தி.மு.க பிரமுகர் ஒட்டி வந்த கார், தடுப்பு கட்டைகள் மீது மோதியது. இதில் பவானி காவல் நிலைய பெண் காவலர் சுலேகா மீது தடுப்பு கட்டை மோதியதில், அவர் தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அரசு மருத்துமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
சற்றும் எதிர்பாராத நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றதால், அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அ.தி.மு.க பிரமுகர் சந்திரசேகர் அதிவேகமாக ஒட்டி தப்பி சென்ற காரை இரு சக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்தவிசாரணையில் அ.தி.மு.க பிரமுகர் சந்திரசேகர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது
அ.தி.மு.க கொடி கட்டிய காரில் வந்த திருப்பூர் அ.தி.மு.க பிரமுகர் நள்ளிரவில் குடிபோதையில் சோதனை சாவடி தடுப்புகள் மீது மோதி விட்டு சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனையடுத்து காரை பறிமுதல் செய்து தொடர்ந்து சந்திரசேகரிடம் சித்தோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.