தமிழ்நாடு

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை எச்சரிக்கை!

காற்றின் வேகம் காரணமாக தென்மேற்கு அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும், அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸில் ஒட்டி இருக்கும்.

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 ல் இருந்து 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை ஒட்டி இருக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் ஏழு செ.மீ மழையும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories