கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாமானியர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலிஸார் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக செயல்படும் அ.தி.மு.க மக்களுக்கு எந்த வித உதவிகளை செய்யாமலும் தனக்கென்ன என்பதுபோல திரிகிறது.
இதில் களத்திற்குச் சென்று உதவிகளை செய்துவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.கவினர் பற்றி வீண் வதந்திகளையும் மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலையும் அ.தி.மு.க செய்துவருகிறது.
அ.தி.மு.க அரசு பா.ஜ.க அரசை ஆதரித்ததில் இருந்து பா.ஜ.கவின் தீவிர ஆதரவாளர்களாக அ.தி.மு.க அமைச்சர்களே மாறிபோன பறிதாபம் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க தமிழகத்திற்கு என்னவொரு கெடுதல் விளைவித்தாளும் அதற்கு வரிசையில் நின்று ஆதரவு தெரிவிக்கும் கொள்கைப் பரப்பு வீரர்களாக அ.தி.மு.கவினர் மாறிபோயுள்ளனர்.
அப்படி பா.ஜ.கவின் துதிபாடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினி தொடங்கி வைத்துள்ள "ஒன்றிணைவோம் வா" முயற்சியை காமெடி செய்வதாக நினைத்து அரசியல் வன்மத்துடன் விமர்சித்திருந்தார்.
அப்படி வெட்டி வியாக்கியானம் பேசிய அதே அமைச்சர் இன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிவாரணா உதவி வழங்கயிருக்கிறார். கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர்.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிவாரணம் கொடுத்துக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனிமனித இடைவெளி பற்றி பேசும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலில் அவர் அதனை கடைபிடிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.