இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் தமிழகமும் ஒன்று. ஒன்று இரண்டு என இருந்த பாதிப்பு கடந்த 3 வார இடைவேளியில் 1,000ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இந்த அரசாங்கம் காட்டிய அலட்சியத்தால்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அரசு பழிவிழுந்துவிடும் என அதிகாரிகளை மட்டும் பேசப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் முன்னுக்குப்பின் முரணாக பேச்சால் அரசுக்கும் சுகாதாரத்துறை செயலாளருக்கும் கடும் நெருக்கடி ஏற்படுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு மத்திய அரசும் தமிழகத்தின் கொரோனா பாதிப்புக்கு மாநில அரசுமே காரணம். உலக சுகாதார நிறுவனம் டிசம்பர் மாதத்திலேயே உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மத்தியில் நாடாளுமன்றத்தையும் மாநிலத்தில் சட்டமன்றத்தையும் கூட்டி அலட்சியமாக இந்த அரசு செயல்பட்டது.
சரி அரசுக்கு தான் அக்கரை இல்லையென்றால் தமிழகத்தில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டியது. இந்த மெத்தனப்போக்கை மறைப்பதற்கு சுகாதாரத்துறை முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்து வருகிறது.
குறிப்பாக, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டியளிக்கும் போது, “தமிழகத்தில் முதல் கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டது பிப்ரவரியில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். இதுதொடர்பாக நமக்கு இப்போது தான் தெரிய வந்தது. அதன்பிறகு ஆய்வு செய்து நிபுணர் குழு அமைத்து என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது, என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக அறிவுரை வழங்கினார்கள்” என்று கூறினார்.
அவரின் இந்த அலட்சிய பதிலுக்கு கண்டனமும் பல்வேறு கேள்விகளும் எழுந்தது. குறிப்பாக தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திலேயே நோய் தொற்றுடையவர்கள் கண்டறியப்பட்ட பிறகு ஏன் மார்ச் மாதம் வரை எந்த நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள்.
இதனையடுத்து கடந்த வாரத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் மார்ச் 9ம் தேதிக்கு பிறகு தான் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்” என்று புதிய தகவலை தெரிவித்தார். அதுமட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் அதற்கு முன்னரே நோயாளிகள் கண்டறியப்பட்டது. ஆனால் தம்மிழகத்தில் தற்போது கண்டறியப்பட்டதால் பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” என பேசியுள்ளார்.
பீலா ராஜேஷுன் இந்த பதில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆய்வகம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், சுகாதாரத்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்பட்ட பிறகு அரசு மீதும் தன் மீதும் குற்றச்சாட்டு வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னுக்குப்பின் முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.