தமிழ்நாடு

கொரோனா ஊரடங்கை மீறி ஜெ. நினைவிடம் கட்ட தொழிலாளர்களைத் தொல்லை செய்யும் எடப்பாடி அரசு! #CoronaLockdown

ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜெயலலிதா நினைவிடத்தில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்கை மீறி ஜெ. நினைவிடம் கட்ட தொழிலாளர்களைத் தொல்லை செய்யும் எடப்பாடி அரசு! #CoronaLockdown
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மறைந்த ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தமிழக அரசு 2017-ம் ஆண்டு ரூ.50 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கியது.

இதைத்தொடர்ந்து அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. ஜெயலலிதா நினைவிடம் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஃபீனிக்ஸ் பறவை தோற்றத்தை 15 மீட்டர் உயரத்தில் அமைக்கும் பணி சில மாதங்களாக நடந்து வந்தது.

தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் உள்ள ‘பறக்கும் குதிரை’ சிலையைப் புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. இப்பணிகளில் ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை மக்கள் அனைவரும் கடைபிடிப்பதற்காக, அனைத்துப் பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கை மீறி ஜெ. நினைவிடம் கட்ட தொழிலாளர்களைத் தொல்லை செய்யும் எடப்பாடி அரசு! #CoronaLockdown

ஆனால், ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜெயலலிதா நினைவிடத்தில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை உட்பட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கூட எந்த பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்காமல் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணியை அரசே மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகள் போலிஸாரால் தாக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் போலிஸாரால் தாக்கப்பட்டு இஸ்லாமிய பெரியவர் ஒருவர் உயிரிழந்தார். ஆனால், அரசே ஊரடங்கு விதிகளை மீறி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories