தமிழ்நாடு

தொடரும் முறைகேடுகள்.. அரசு மீது நம்பிக்கை இழந்த மக்கள் : புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய TNPSC

குரூப்-2ஏ, குரூப் 4 தேர்வுகளில் புதிய சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

தொடரும் முறைகேடுகள்.. அரசு மீது நம்பிக்கை இழந்த மக்கள் : புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய TNPSC
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் லஞ்சம் கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்கள் அரசு பணியிலும் பணிபுரிவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், நாளுக்கு நாள் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரத்தில் பலர் மீது கைது நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவை எல்லாம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

ஆகையால், எதிர்வரும் தேர்வுகளின் மூலம் முறைகேடுகளை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக கடந்த 7ம் தேதி ஆதார் கட்டாயம் உள்ளிட்ட 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

இந்நிலையில், தேர்வு நடைமுறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு மேலும் 11 புதிய விதிகளை வெளியிட்டுள்ளது TNPSC நிர்வாகம்.

தொடரும் முறைகேடுகள்.. அரசு மீது நம்பிக்கை இழந்த மக்கள் : புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய TNPSC

அதில்,

* குரூப்-4 , குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலையாக நடத்தப்படும்.

* காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு 9 மணிக்கே தேர்வு கூடத்திற்கு தேர்வர்கள் வரவேண்டும்.

* 10 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வெழுத அனுமதி கிடையாது.

* அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். ஏதேனும் ஒரு கேள்விக்கு விடையளிக்காவிட்டாலும் விடைத்தாள் செல்லாது.

* ஏதேனும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் A,B,C,D Optionக்கு பதில் தெரியாது என்ற ‘E’-ஐ தேர்வு செய்யலாம்.

* விடைத்தாளில் தேர்வரின் கையெழுத்துக்கு பதில் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.

* விடைத்தாளில் உள்ள கூடுதல் விவரங்களை நிரப்புவதற்காக தேர்வு நேரம் முடிந்த பிறகு 15 நிமிடம் ஒதுக்கப்படும்.

தொடரும் முறைகேடுகள்.. அரசு மீது நம்பிக்கை இழந்த மக்கள் : புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய TNPSC

* விடைத்தாள்கள் கொண்டுச்செல்லும் வாகனங்களில் GPS மற்றும் CCTV கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

* தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து இவை அணைத்தும் நேரலையாக கண்காணிக்கப்படும்.

* தேர்வாணையத்துக்கும், தேர்வர்களுக்கும் இடையேயான பிணைப்பை உருவாக்கும் வகையில் தேர்வாணைய இணையதளத்தில் சிறப்பு தகவல் தளம் உருவாக்கப்படும்.

* இந்த சிறப்பு தகவல் தளத்தின் மூலம், தங்களுக்கு தெரியும் தகவலை தேர்வர்கள் பதிவு செய்யலாம். இது ரகசியமாக பாதுகாக்கப்படும்.

தேர்வில் முறைகேட்டைத் தடுப்பதற்காக இந்த புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எதிர்காலத்தில் சரியான நபர்களை பணிக்குத் தேர்ந்தெடுக்க முடியும் என TNPSC குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories