தமிழ்நாடு

“அவளை வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள்” : ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததை ஆசிரியைகள் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அவளை வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள்” : ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செங்கல்சூளை தொழிலாளி பெருமாள். இவரது இரண்டாவது மகள் பேச்சியம்மாள் பாளையிலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாகத் தெரிகிறது. மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததாகக் கூறி பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்துக் கண்டித்துள்ளனர். மேலும் பேச்சியம்மாளை வேறு பள்ளியில் சேர்க்குமாறும் கூறியுள்ளனர்.

இதனிடையே பள்ளிக்குச் சென்ற மாணவியை ஆசிரியர்கள் தினமும் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பேச்சியம்மாள் கடந்த 29ம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

“அவளை வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள்” : ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

செய்துங்கநல்லூர் போலிஸார் வழக்குப்பதிந்து பேச்சியம்மாள் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பேச்சியம்மாள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories