தமிழ்நாடு

”பா.ஜ.கவுல இருக்க அம்புட்டு பேரும் அறிவாளியா இருந்தா என்ன செய்ய?” - சூழலியலாளர் சுந்தர்ராஜன் 

கார்பன் வரியை முழுமையாக நீக்கும் மத்திய பா.ஜ.க அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”பா.ஜ.கவுல இருக்க அம்புட்டு பேரும் அறிவாளியா இருந்தா என்ன செய்ய?” - சூழலியலாளர் சுந்தர்ராஜன் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனின் ஃபேஸ்புக் பதிவில் இருந்து ” All roads lead to Rome என்றொரு சொலவடை உண்டு. இந்தியாவில் அனைத்து அறிவாளிகளின் புகலிடமாக பா.ஜ.க மாறியிருக்கிறது போல.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பல்வேறு பேரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில், மாசற்ற ஆற்றலுக்கான தேசிய நிதியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து பணத்தை எடுத்து ஜி.எஸ்.டியில் ஏற்பட்ட இழப்பை சரிகட்டியதற்கே நிறைய எதிர்ப்பு வந்தது. இப்போது இன்னொரு படி "முன்னேறி" செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்தபோது உருவாக்கப்பட்ட நிதியத்திற்கு வருவாய் நிலக்கரியிலிருந்து வந்தது. அதாவது இந்தியாவிலிருந்தோ அல்லது வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டால் டன் ஒன்றிற்கு 50ரூபாய் இந்த நிதியத்திற்கு வரி கட்டவேண்டும். பிறகு படிப்படியாக உயர்ந்து டன் ஒன்றிற்கு 400 ரூபாய் ஆனது "கார்பன் வரி". இப்போது இதற்கும் முடிவுகட்டிவிட துடிக்கிறது ஆளும் மத்திய அரசு.

”பா.ஜ.கவுல இருக்க அம்புட்டு பேரும் அறிவாளியா இருந்தா என்ன செய்ய?” - சூழலியலாளர் சுந்தர்ராஜன் 

மாநிலங்களிலுள்ள மின்னுற்பத்தி நிறுவனங்களும் அனல் மின்நிலையங்களை இயக்கும் தனியார் நிறுவனங்களும் இந்த வரியை கட்டுவதால் அவர்களால் மாசை கட்டுப்படுத்தக்கூடிய கருவிகளை வாங்கிவைத்து மாசை கட்டுப்படுத்த முடியவில்லையாம். அதனால் கார்பன் வரியை முழுமையாக நீக்கிவிடப்போகிறதாம் மத்திய அரசு. என்ன கொடுமை !

குறைந்தபட்சம் அவர்கள் கட்டக்கூடிய கார்பன் வரியை பயன்படுத்தி புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களில் முதலீடு செய்தால் அனல் மின்நிலையங்களை படிப்படியாக மூடலாம், இங்கே இந்த நிறுவனங்கள் கருவிகளை நிறுவப்போவதும் இல்லை, அரசிற்கு புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களில் முதலீடு செய்ய பணமும் இருக்கப்போவதில்லை.

இதில் சில அறிவுஜீவிகள் வேறு, மோடி அரசு வந்த பிறகு பார்த்தீர்களா மாசை குறைப்பதற்கு எவ்வளவு வேலைகள் செய்கிறார்கள் என்று போர்டு முன்னால் வந்து பேசிக்கொண்டு திரிகிறார்கள். என்ன சொல்ல. அம்புட்டு பயலும் அறிவாளிகளா இருந்தா என்னதான் செய்ய??.”

- சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

banner

Related Stories

Related Stories