தமிழ்நாடு

“ஆபாச வீடியோ பகிர்ந்த 30 பேர் லிஸ்ட்டை அனுப்பிட்டேன்” - ஏ.டி.ஜி.பி ரவி பேச்சு!

பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தால் சுட்டுக் கொல்லுங்கள் அதுவும் தற்காப்புதான் என ஏ.டி.ஜி.பி ரவி பெண்கள் மத்தியில் பேசியுள்ளார்.

“ஆபாச வீடியோ பகிர்ந்த 30 பேர் லிஸ்ட்டை அனுப்பிட்டேன்” - ஏ.டி.ஜி.பி ரவி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்குழந்தைகள் ஆபாச வீடியோ பகிர்ந்தவர்கள் 30 பேரின் பட்டியல் சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஏ.டி.ஜி.பி. ரவி கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு காவல்துறை ஏ.டி.ஜி.பி ரவி கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி ரவி பேசியதாவது, “காவலன் SOS செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தாலும் 4 லட்சம் பேர்தான் தங்களைப் பற்றிய முழு தகவல்களை பதிவேற்றி உள்ளனர். காவலன் SOS செயலியை எளிமையான முறையில் எல்லோரும் கையாளும் வகையில் மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவு. அதனை ஒரு குற்றமும் இல்லாத நகரமாக மாற்றவேண்டும். குழந்தைகளுக்கு எதிரான ஆபாசப் படங்களை பரப்பிய 30 பேரின் பட்டியல் சென்னை மாநகர காவல்துறைக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அனுப்பி வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோல அனுப்பி உள்ளோம்.

தமிழக காவல்துறை சார்பில் ’டிஜிட்டல் டிசிப்ளின்’ என்ற புதிய திட்டத்தை உருவாக்க உள்ளோம். காவல்துறை குடையாக இருந்து பெண்களை பாதுகாக்கும். பெண்களை தவறான நோக்கில் எவரும் நெருங்கினால் அவர்களை அடிக்கவும், உதைக்கவும் எந்தத் தயக்கமும் வேண்டாம். பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தால் சுட்டுக் கொல்லுங்கள் அதுவும் தற்காப்புதான். உங்களுடையே பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

தவறாக நடந்துகொள்ளும் நபரிடம் தைரியமாக சொல்லுங்கள் எங்கள் அண்ணன் ரவி, ஏ.டி.ஜி.பியாக காவல்துறையில் இருக்கிறார் என்று. செயலியில் மட்டுமல்ல காவல்துறையின் செயல்பாடுகளிலும் மாறுதல் இருக்கும்.”

இவ்வாறு ஏ.டி.ஜி.பி., ரவி பேசினார்.

banner

Related Stories

Related Stories