கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடலூரில் பலத்த மழையால் கடந்த 29-ம் தேதி சுவர் இடிந்து 3 பேர் இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடுர் அணை திறக்கப்பட்டதால், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 4 வீடுகள் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை காரணமாக பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் இருந்து மதுரை வர வேண்டிய 2 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளது.
அதீத கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
செங்கல்பட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.
சென்னையில் மழை தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.
Landline :
044- 25384520
044 - 25384530
044 - 25384540
வாட்ஸ் அப் எண்:
9445477205
சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.