தமிழ்நாடு

''தமிழக காவல்துறையில் இனி தமிழில் தகவல் தொடர்பு!'''- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

காவல்துறையில் வருகைப் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திடவும் குறிப்பாணைகள், கடிதத் தொடர்புகளை தமிழில் மேற்கொள்ளவும் தமிழக டி.ஜி.பி ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

''தமிழக காவல்துறையில் இனி தமிழில் தகவல் தொடர்பு!'''- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழக காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் நவ. 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சிமொழி திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டது.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்களைத் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு, முன் கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்துப் பதிவுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும்.

''தமிழக காவல்துறையில் இனி தமிழில் தகவல் தொடர்பு!'''- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இட வேண்டும். அனைத்து வரைவு கடிதத் தொடர்புகளும், குறிப்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். மேலும் அனைத்து காவல் வாகனங்களுக்கும் தமிழில் காவல் என்று இடம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து அலுவலக முத்திரைகளும் மற்றும் பெயர்ப் பலகையும் தமிழில் மாற்றப்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேற்கண்ட பொருள் தொடர்பாக தலைமை அலுவலக அனைத்துப் பணியாளர்களுக்கும், பிற காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதி அவர்களுக்கு வாழ்த்துகள்.

இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுக!'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories