தமிழ்நாடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோர் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க கோரி அவரது தாயார் மனு மதுரை சிறை நிர்வாகத்திடம் அளித்திருந்தார். ரவிச்சந்திரனின் பரோல் மனுவை மதுரை சிறைத்துறை நிராகரித்துள்ளது.

பாதுகாப்பு கருதி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க இயலாது என்று ரவிச்சந்திரனின் தாயாருக்கு மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் மார்ச் மாதம், சொத்துகளை பாகப்பிரிவினை செய்வதற்காக 15 நாட்களுக்கு நிபந்தனைகளுடன் பரோல் விடுப்பு ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories