தமிழ்நாடு

இருக்கும் இடத்திலிருந்தே கைரேகை மூலம் வாக்களிக்கும் இயந்திரம்:அரசுப்பள்ளி மாணவர்களை கௌரவிக்கும் ஜனாதிபதி!

தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வகையில் புதிய இயந்திரத்தை உருவாக்கிய தமிழக அரசுப்பள்ளி மாணவர்களை குடியரசுத் தலைவர் கௌரவிக்க உள்ளார்.

இருக்கும் இடத்திலிருந்தே கைரேகை மூலம் வாக்களிக்கும் இயந்திரம்:அரசுப்பள்ளி மாணவர்களை கௌரவிக்கும் ஜனாதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான சுதர்ஷன், விஷால், சுஷில் ஆகிய மூவரும், நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தை கடந்த ஆண்டு வடிவமைத்தனர்.

இந்த நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி, வாக்காளர் இருக்கும் இடத்தில் இருந்து தனது தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். அதற்கு ஆதார் எண்ணும், வாக்களரின் கைரேகையை மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த இயந்திரத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இருக்கும் இடத்திலிருந்தே கைரேகை மூலம் வாக்களிக்கும் இயந்திரம்:அரசுப்பள்ளி மாணவர்களை கௌரவிக்கும் ஜனாதிபதி!

இதன் மூலம் தேர்தலில் கள்ள ஓட்டுப் போடுவது தடுக்கப்படும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நவீன இயந்திரத்தை கண்டுபிடித்த இந்த மூன்று மாணவர்களும் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக தேர்வாகியுள்ளனர்.

அப்போது, தாங்கள் வடிவமைத்த நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை குடியரசுத் தலைவரிடம் விளக்கிக் கூறவுள்ளனர். மேலும், இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருப்பதால் சென்னை அரசுப்பள்ளி மாணவர்களை குடியரசுத் தலைவர் கௌரவிக்கவுள்ளார். இதற்கிடையே, தமிழக பள்ளிக்கல்வி இயக்குநரையும் சந்தித்து மாணவர்கள் வாழ்த்துப் பெற்றனர்.

banner

Related Stories

Related Stories