நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இந்த அணுமின் நிலையத்தில் செயல்பட்டுவந்த கணினிகளில் வடகொரியாவைச் சேர்ந்த 'லாசரசு' எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு ‘டி ட்ராக்’ - D TRACK என்ற வைரஸ் மூலம் அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியாவின் முக்கிய சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்களில் ஒருவரான புக்ராஜ் சிங் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த பதிவிற்குப் பிறகு சமூக வலைதளங்களில் வைரஸ் குறித்து பீதி கிளம்பி பெரும் பரபரப்பட்டது. ஆனால் உண்டாக்கியது. ஆனால்புக்ராஜ் சிங் வெளியிட்ட இந்த தகவலை, கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது. பின்னர் இதுதொடர்பாக இந்திய அணு மின்சாரக் கழகம் அறிக்கை வெளியிட்டது.
அதில், “என்.பி.சி.ஐ.எல் கம்ப்யூட்டர்களில் ‘மால்வேர்’ கண்டுபிடிக்கப்பட்டது உண்மைதான். கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சி.இ.ஆர்.டி இதனைக் எங்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் அணுசக்தித் துறை நிபுணர்கள் உடனே ஆய்வு செய்தனர்” என்றும், “அணு உலை கணினி தொடர்பு வலையமைப்பில் தொடர்பில்லாதது என்றும், அதுதனித்துவமாக இயங்கும்” என அதில் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையம் மீது வைரஸ் தாக்குதலை வட கொரியாதான் நடத்தியுள்ளதாக தென் கொரியா மென்பொருள் ஆய்வாளர்களின் நிபுணர் குழு ஆதரங்களை அடிப்படையில் கூறியுள்ளது.
தென்கொரியாவின் சைபர் பாதுகாப்பு நிபுணர்களில் இஸ்யூமேக் லேப்ஸின் என்ற தன்னார்வல அமைப்பின் கூற்றுபடி அணுசக்தி பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் தோரியம் அணுசக்தி தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு முன்னணியில் உள்ளது. அதனால் கடந்தாண்டு முதலே வட கொரியா ஹேக்கர்கள் அந்த தகவல்களைப் பெற தொடர்ந்து முயற்சி செய்துவருவதாகவும் கூறுகின்றனர்.
அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமான வைரஸ் ‘டி ட்ராக்’ குறித்து அக்டோபர் 30 அன்று, இந்திய அணுசக்தி கழகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் "NPCIL அமைப்பில் வைரஸ் அடையாளம் காண்பது சரியானது" என்று உறுதிப்படுத்தியது.
அதுமட்டுமின்றி, சில ஆதாரங்களையும் தென் கொரிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதில், வட கொரிய “ஹேக்கர் குழு பி” எனக் கூறப்படுகிறது. மேலும் 16-இலக்க (dkwero38oerA ^ t @ # - ) என்ற கடவுச் சொல்லை பாதிக்கப்பட்ட கணினியில் உள்ள கோப்புகளின் பட்டியலை எடுக்க பயன்படுத்தும்.
அதேப்போல் 2007 முதல் பல தாக்குதல்களுக்கு ஒரே கடவுச்சொல்லை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என கூறுகின்றனர். கூடங்குளம் தாக்குதல் நடத்துவதற்கு பல ஹேக்கர் குழுக்களை இணைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வட கொரிய ஹேக்கர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் டிட்ராக் வைரஸ் குறியீட்டின் வலையமைப்பு எண் குறித்து ஆய்வு செய்த போது, 2016-ல் தென் கொரிய இராணுவத்தின் தகவல்களை திருடிய அதே வலையப்பு எண் தான்” என நிபுணர்கள் குழு தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பில் மோடி அரசு கவனம் செலுத்தாதே காரணம் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.