தமிழ்நாடு

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை தேர்தல் - பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கபட இருப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை தேர்தல் -  பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியும், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன் போட்டியிடுகின்றனர்.

இரண்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. இரு தொகுதிகளிலும் கடந்த 2 வாரங்களாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேப்போல் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, இறுதிகட்ட பிரசாரம் செய்தார்.

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை தேர்தல் -  பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

தேர்தல் வாக்குசேகரிப்பு மற்றும் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவு பெற்றது. தற்போது வாக்குபதிவுக்கான பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச் சாவடிகளில் 1,400 பேர் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் , விக்கிரவாண்டி தொகுதியில் 225 வாக்குச் சாவடிகளில் 1,331 பேரும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரண்டு வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பிற்காக 1800-க்கும் மேற்பட்ட போலிஸாரும், 6 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், 3 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள ஓட்டுச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் கூடுதல் போலிஸாரும் நிறுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடமையாற்றலாம் என கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

மேலும் இரு தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அந்த மாவட்டத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories