தமிழ்நாடு

தஞ்சைக்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்... விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

தஞ்சைக்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சைக்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்... விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூரில் மின்சார இணைப்புகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் தாக்குதலால் மின்கம்பங்கள் விழுந்து சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அதனை சீர்படுத்தப்படாமல் இருளிலேயே விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வரும் கொடுமை தொடர்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் தொடர் நடவடிக்கை மேற்க்கொண்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, மின்சார துறை, காவல்துறையினர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. வருவாய் துறை மூலம் நில அளவை செய்து சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதிய கம்பங்கள் அமைத்து மின் இணைப்பு கொடுக்க மின்சார வாரிய தலைவரும் சிறப்பு அனுமதி வழங்கி பணி துவங்கிய நிலையில் தனிநபர் சிலரை துண்டி விட்டு ஆளும் கட்சியினர் சிலரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதால் மின் இணை ப்பும் வழங்காமல், சாலை போக்குவரத்து இன்றி ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஆளும் கட்சி பிரமுகர்களின் அச்சுறுத்தலால் சட்டப்படி நடவடிக்கைகளை மேற்க்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.

தஞ்சைக்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்... விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

எனவே இதனை கண்டித்தும், தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி இயற்கை சீற்றங்கள் ஏற்படும் நிலையில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்றி பாதிக்கும் நிலையில், தீபாவளி நெருங்கி வரும் வேலையில் உடன் மின் இணைப்பு வழங்கி, சாலை அமைத்து வெளிச்சம் கொடுத்து விவசாயக் குடும்பங்களை பாதுகாத்திட வலியுறுத்தி வரும் 22ம் தேதி தஞ்சாவூர் வருகை தர உள்ள தமிழக ஆளுநர் பண்வாரிலால் புரோகித் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தினை நடத்திட தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories