தமிழ்நாடு

‘Rapido’ செயலி மூலமாக பயணிப்பவரா நீங்கள்.. கைது நடவடிக்கை பாயும் - போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டண முறையில் வாடிக்கையாளர்களை ஏற்றி வந்த, 37 இருசக்கர வாகனங்களை இதுவரை போக்குவரத்து காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

‘Rapido’ செயலி மூலமாக பயணிப்பவரா நீங்கள்.. கைது நடவடிக்கை பாயும் -  போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொதுமக்கள் யாரும் ‘Rapido’ ஆப் மூலமாக வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

‘Ola’, ‘Uber’ போன்ற வாடகை கார், ஆட்டோ செயலிகளைப் போல 'Rapido' எனும் செயலி மூலம், இருசக்கர வாகனங்களில் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து, அழைத்துச் செல்லும் முறை சென்னையில் பரவலாக நடைபெற்று வருகிறது.

ஆனால், இப்படி இருசக்கர வாகனங்களை வணிக ரீதியான போக்குவரத்துக்குப் பயன்படுத்தக்கூடாது என விதிமுறைகள் உள்ளன. உரிய அனுமதி பெறாமல் இந்த ‘Bike Taxi’ முறை செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

தனி நபர் செல்லும் இருசக்கர வாகனத்தில், வாடிக்கையாளரை ஏற்றுவது சட்டத்திற்கும், போக்குவரத்து விதிமுறைகளுக்கும் புறம்பானது. இவ்வாறு பயணித்தால் விபத்துக் காப்பீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

‘Rapido’ செயலி மூலமாக பயணிப்பவரா நீங்கள்.. கைது நடவடிக்கை பாயும் -  போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டண முறையில் வாடிக்கையாளர்களை ஏற்றி வந்த, 37 இருசக்கர வாகனங்களை இதுவரை போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது. இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கண்காணித்து வருகின்றன.

இதனால், மக்கள் இந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories