தமிழ்நாடு

19,426 அரசு பள்ளி ஆசிரியர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்த அ.தி.மு.க அரசு!

தமிழக அரசுப்பள்ளிகளில் 19,426 ஆசிரியர்களை கட்டாய பணியிடமாற்றம் செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது அ.தி.மு.க அரசு

19,426 அரசு பள்ளி ஆசிரியர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்த அ.தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற நடவடிக்கை செய்வது வாடிக்கை. அதனடிப்படையில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை அவரது விருப்பத்திற்கேற்ப ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யும் கலந்தாய்வு நடைபெறும்.

இதற்கிடையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ஜூலை 8 - ஜூலை 15ம் தேதி வரை 5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, பணி மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் இணையம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் 19,426 பேரை கட்டாய பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

banner

Related Stories

Related Stories