தமிழ்நாடு

ஜூன் 21க்கு மேல் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் தகவல்!

தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் வரும் ஜூன் 21ம் தேதிக்கு மேல் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 21க்கு மேல் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கக்கடலின் வடக்கு பகுதியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் ஜூன் 21ம் தேதிக்கு மேல், தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் எனவும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாமதமாகியுள்ளது என்றும், 15% இடங்களில் மட்டுமே பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடாக மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் போன்ற தென்மாநிலங்களில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பிற மாநிலங்களுக்கு பரவ இன்னும் ஒரு வாரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஜூன் 25ம் தேதியும், மத்திய மாநிலங்களில் ஜூன் இறுதியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories