தமிழ்நாடு

ரயில்வே அதிகாரிகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் - தென்னக ரயில்வே உத்தரவு!

ரயில்வே அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்துக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் - தென்னக ரயில்வே உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டதற்கு கட்டுப்பாட்டு அறைகள் இருந்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மொழிப் பிரச்னையே காரணம் என கூறப்பட்டது.இதனை தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தென்னக ரயில்வே ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், பிராந்திய மொழிகளில் பேசும் போது புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளி்ல் பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, தமிழ் அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் - தென்னக ரயில்வே உத்தரவு!
banner

Related Stories

Related Stories