தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கியதை அடுத்து நேற்று தமிழகத்திலும் பருவமழை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவமழை காரணமாக தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும், அதன் பிறகு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.