காவிரியில் இருந்து தமிழகத்துக்கான நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடி செய்துவந்த விவசாயிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருபோக சாகுபடியையே செய்து வருகின்றனர்.
எனவே, தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காவிரி நீரை திறப்பு குறித்து அண்மையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, தமிழகத்துக்கு ஜூன் மாதம் வழங்கவேண்டிய 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை கர்நாடக அரசு இதுவரை செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், காவிரி நீர் திறக்கப்படாதது குறித்து ஆலோசிக்க வருகிற ஜூன் 25ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.