தமிழ்நாடு

கட்டாய ஹெல்மெட் சட்டம் : உயர் நீதிமன்ற கேள்வியும்... தமிழக அரசின் பதிலும்!

தலைக்கவசம் அணிவது கட்டாயம் தொடர்பான சட்டத்தை அமல்படுத்தாதது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கட்டாய ஹெல்மெட் சட்டம் : உயர் நீதிமன்ற கேள்வியும்... தமிழக அரசின் பதிலும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், பைக் ரேஸின் போது இருவர் ஹெல்மெட் அணியாததால் காயமுற்றிருப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

கட்டாய ஹெல்மெட் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டம் : உயர் நீதிமன்ற கேள்வியும்... தமிழக அரசின் பதிலும்!

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்த்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், பைக் ரேஸை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக போக்குவரத்துத்துறையின் இணை மற்றும் துணை ஆணையர்கள் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories