தமிழ்நாடு

ரம்ஜான் பண்டிகையையொட்டி குன்னூர் - ரன்னிமேடு இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி குன்னூர் - ரன்னிமேடு இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்காக குன்னுார் முதல் ரன்னிமேடு வரை சிறப்பு மலை ரயில் வரும் ஜூன் 3-ம் தேதி முதல் ஜூன் 7 வரை வரை இயக்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக, தென்னக ரயில்வே பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு மலை ரயில் மே 27ம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை இயக்கப்பட்டது.

இதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, தற்போது ரம்ஜான் விடுமுறையின் போது, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் ஜூன் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை குன்னுாரிலிருந்து ரன்னிமேடு வரை மீண்டும் சிறப்பு ரயிலை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த ரயிலில் முதல் வகுப்பிற்கு 450 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கு 320 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories