தமிழ்நாடு

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! - சென்னை வானிலை மையம்

வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகத்தில் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! - சென்னை வானிலை மையம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெற்கு உள் கர்நாடகம் தொடங்கி கன்னியாகுமரி வரை காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலவுகிறது. ஆகையால் மே 22 முதல் 24ம் தேதி வரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்று தெற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மே 23ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் தமிழகத்தின் வடக்கு மற்றும் மற்றும் மேற்கு உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 29-38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்பதால் காலை 11 முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories