காரைக்கால் மாவட்டம் வடமட்டம் என்ற கிராமத்தில், தேவா என்பவருக்கு சொந்தமான வயலில் அதே பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிப்போரின் மாடுகள் மேய்ந்துள்ளன.
இதனால், ஆத்திரமடைந்த வயலின் உரிமையாளர், நள்ளிரவு சமயத்தில் தனது அடியாட்களுடன் சென்று, தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள அனைத்து கால்நடைகளையும் சரமாரியாக வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக கேள்வி கேட்க வந்த அப்பகுதி மக்களையும் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். எனவே, கோட்டுச்சேரி போலீசாரிடம் வடமட்டம் கிராம மக்கள் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் வேதனைக்குள்ளாகினர்.
இந்நிலையில், வயல் உரிமையாளர் தேவா நடத்திய வன்முறை வெறி ஆட்டத்தினால் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளன. மேலும், சில மாடுகளை காணவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.