சங்ககால படைப்பு இலக்கியங்களுள் அகத்திணை பாடல்களில் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்பது தமிழரின் மரபு. இந்த விதிமுறை அகத்திணையில் மட்டுமல்லாமல் பெரும்பாலான புறத்திணை பாடல்களிலும் பின்பற்றப்பட்டது தான் ஆச்சரியம். இப்படி படைப்பிலக்கியங்களில் பெயரை குறிப்பிடாமல் பாடல் இயற்றிய தமிழரின் மரபைப் பற்றி எடுத்துரைக்கிறார் பேராசிரியர் பேச்சிமுத்து.