தமிழ்நாடு

TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,500 ஆசிரியர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,500 ஆசிரியர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கு மேலும் 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்ச்சி பெறாதவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு தற்போது அதிரடியாக சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

banner

Related Stories

Related Stories