தமிழ்நாடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் பொதுமக்கள் அவதி ! 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்காக நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களால் பொதுமக்கள் அவதி.  

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் பொதுமக்கள் அவதி ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நேற்று சென்னை வந்தார்.பின்னர் அவர் சென்னையில் தங்கி காலை ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் மீண்டும் சென்னை திரும்புவதாக இருந்தது.

இதற்காக தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு சொகுசு ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு காலை திரிசூலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து காலை 8:20 மணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆந்திர மாநிலம் தடா பகுதிக்கு புறப்பட்டு சென்றார். இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்த முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக சென்ற ரயில்களும் அங்கங்கே நிறுத்தப்பட்டது.இதனால் சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள்

banner

Related Stories

Related Stories