தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.87 லட்சம் மாணவர்கள் எழுதிய பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இதில், மாணவர்கள் 88.57 சதவிகித பேரும், மாணவிகள் 93.64 சதவிகித பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 92.64% தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக மொத்த பள்ளிகளில் திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.
மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
மாவட்ட வாரியாக மொத்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
இதனையடுத்து அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 93.64%, மெட்ரிக் பள்ளிகள் 98.26% தேர்ச்சி பெற்றுள்ளது. எனவே, 2018-19 கல்வி ஆண்டில் தமிழகத்தில் 91.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வினாத்தாளை நகல் பெறுவதற்கும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்குமான தேதியை தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22 - 24 வரையில் மறு கூட்டலுக்கும், விடைத்தாள் நகலை பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம். பாட வாரியாக வினாத்தாள் நகலை பெற 275 ரூபாயும், மறு மதிப்பீடுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கான சிறப்பு தேர்வு தேதியும், வினாத்தாளை இணையதளத்தில் பெறுவதற்கான தேதியும் பிறகு அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.