தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது - கரூரில் அ.தி.மு.கவினர் வன்முறை

திருவாரூரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது - கரூரில் அ.தி.மு.கவினர் வன்முறை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

40 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. இனி எந்தவிதமான தேர்தல் பரப்புரைக்கும் விளம்பரங்களுக்கு தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதியில்லை.

திருவாரூரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

கரூரில் தி.மு.க - காங்கிரஸின் இறுதிக்கட்ட பரப்புரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. ஆனால், அதே இடத்தில் பரப்புரையை செய்ய அ.தி.மு.கவினரும் கேட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஆனால், காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்ததால், பேருந்து நிலையம் அருகே திமுக - காங்கிரஸ் கட்சிகள் பரப்புரை செய்தனர். இருந்த போதும் அதிமுகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். திமுகவினர் மீதும் போலீஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

முன்னதாக கரூர் அருகே தி.மு.கவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வந்த நாஞ்சில் சம்பத்தின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் எந்த வித காயமும் இன்றி தப்பித்தார்.

banner

Related Stories

Related Stories