தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய மனுவை தள்ளபடி செய்தது உச்சநீதிமன்றம்!

ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய மனுவை தள்ளபடி செய்தது உச்சநீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இந்நிலையில்,ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கபோதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், இயந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதனை மீறி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்

banner

Related Stories

Related Stories