அரசியல்

மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய போராட்டம் : பாஜக முதல்வர் வீட்டை தாக்கிய பொதுமக்கள் ... விவரம் என்ன ?

மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய போராட்டம் : பாஜக முதல்வர் வீட்டை தாக்கிய பொதுமக்கள் ... விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது. இந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானொர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை.

இந்த வன்முறை இடையில் சற்று ஓய்ந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் பெரிய அளவில் வன்முறை உருவானது. இது இந்திய அளவில் அதிர்ச்சி அளித்தது. எனினும் மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் சார்பில் வன்முறையை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய போராட்டம் : பாஜக முதல்வர் வீட்டை தாக்கிய பொதுமக்கள் ... விவரம் என்ன ?

இதனிடையே மணிப்பூரில் கடந்த 11 ஆம் தேதி 6 பேர் கடந்தப்பட்ட நிலையில், அதில் குழந்தை, இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் மணிப்பூரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை வீசி தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

அதே போல மற்றொரு இடத்தில முதலமைச்சர் மருமகன் ராஜ்குமார் இமோ சிங் வீட்டுக்குள் புகுந்த பொதுமக்கள், அங்கிருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களுக்கு தீவைத்தனர். எனினும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அவர் வீடு முழுவதும் எறியப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

banner

Related Stories

Related Stories