பாரிஸ் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பேட்மிட்டன் பிரிவில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்ற துளசிமதி, வெண்கல பதக்கம் வென்ற மனிஷா, நித்தியஸ்ரீ ஆகியோர் நேற்று இரவு சென்னை திரும்பினர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு உயர் சாதனைகளை புரிந்த பதக்கங்களை வென்ற வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம் இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வீராங்கனைகள் துளசிமதி, மனிஷா, நித்திய ஶ்ரீ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், சிறு வயதில் எனது தந்தை எனக்கு பேட் கையில் கொடுத்து விளையாடி சொல்லி கொடுக்கும் போதே எனக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
நான் இந்த வெற்றிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரும் பங்கு இருந்தது, சிறு வயதில் இருந்து SDAT பயிற்சி தான் என்னை வளர்த்தது. என் மிகவும் ஊக்கம் அளித்த என் பெற்றோர், தமிழ்நாடு அரசு, முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி, துறை அதிகாரிகளுக்கு எனது நன்றிகள். இந்த வெற்றியை எனக்கு ஊக்களித்த அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்" எனக் கூறினர்.