விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா- தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து அசத்தல்!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிசுற்றுக்கு நீரஜ் சோப்ரா முன்னேறி பதக்கத்தை நெருங்கியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா- தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் அவர் மேல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்நது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதன் மூலம் தடகளத்தில் முதல் ஒலிம்பிக் தங்கத்தையும், அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அதோடு நிற்காத அவர், பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் தொடர், டயமண்ட் லீக் தொடர், உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடர் என அடுத்தடுத்து பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

தற்போது ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வரும் நிலையில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இதனால் இந்த ஒலிம்பிக் தொடரிலும் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை நீரஜ் சோப்ரா வென்று தருவார் என அவர்மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா- தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து அசத்தல்!

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிசுற்றுக்கு நீரஜ் சோப்ரா முன்னேறி பதக்கத்தை நெருங்கியுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்ற நிலையில், தனது முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர்கள் தூரம் ஈட்டி எறிந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கம் வென்ற நிலையில், தற்போது தகுதி சுற்றிலேயே 89.34 மீட்டர்கள் தூரம் ஈட்டி எறிந்துள்ளார். இதன் காரணமாக, இந்த முறையும் அவர் தங்கப்பதக்கத்தை வெல்வார் என அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories