விளையாட்டு

கோலாகலமாக தொடங்கிய கோபா அமெரிக்கா தொடர் : முதல் போட்டியில் வென்று அசத்திய மெஸ்ஸியின் அர்ஜென்டினா !

கோலாகலமாக தொடங்கிய கோபா அமெரிக்கா தொடர் : முதல் போட்டியில் வென்று அசத்திய மெஸ்ஸியின் அர்ஜென்டினா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஃபிபா உலகக்கோப்பை, யூரோ கோப்பை தொடருக்கு பின்னர் அதிகம் பேரால் பார்க்கப்படும் கால்பந்து தொடராக கோபா அமெரிக்கா தொடர் திகழ்ந்து வருகிறது. பொதுவாக தென்னமெரிக்க நாடுகளுக்கான தொடராக இருந்தாலும் இதில் வேறு கண்டத்தை சேர்ந்த நாடுகளும் அழைப்பு ரீதியாக பங்கேற்று வருகின்றது.

இந்த முறை இந்த கால்பந்து தொடரை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் வட அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கோபா அமெரிக்கா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்த தொடரில் வட அமெரிக்காவை சேர்ந்த அணிகளும் பங்கேற்கவுள்ளது.

அந்த வகையில் தென்னமெரிக்காவை சேர்ந்த 10 நாடுகளும் வட அமெரிக்காவை சேர்ந்த 6 அணிகளும் பங்கேற்கிறது. உலககோப்பைகளை அதிகம் முறை வென்ற அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் இந்த தொடர் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.

கோலாகலமாக தொடங்கிய கோபா அமெரிக்கா தொடர் : முதல் போட்டியில் வென்று அசத்திய மெஸ்ஸியின் அர்ஜென்டினா !

இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி கனடா அணியை சந்தித்தது. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியின் 49-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரெஸ் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 88-வது நேரத்தில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி கொடுத்த பாஸை லோடாரோ மார்டினெஸ் கோல் அடித்தார். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி கனடாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

banner

Related Stories

Related Stories