விளையாட்டு

வளரும் நட்சத்திரமான எம்பாப்பேயின் சர்ச்சை கருத்து : பதிலடி கொடுத்த மெஸ்ஸி... முழு விவரம் என்ன ?

அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, எம்பாப்பேயின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வளரும் நட்சத்திரமான எம்பாப்பேயின் சர்ச்சை கருத்து : பதிலடி கொடுத்த மெஸ்ஸி... முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022- ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த இறுதி போட்டியில் வென்ற மெஸ்ஸி உலகளவில் கொண்டாடப்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஹட் ட்ரிக் கோல் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை வென்ற கைலியன் எம்பாப்பே அதிகம் கவனிக்கப்பட்டார். மெஸ்ஸி -ரொனால்டோவின் காலத்துக்கு பின் அடுத்த உலக சூப்பர் ஸ்டாராக கைலியன் எம்பாப்பே வருவார் என கால்பந்து வல்லுநர்கள் முத்திரை குத்தினர்.

தற்போது 25 வயதாகும் கைலியன் எம்பாப்பே ஏற்கனவே 2018-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் மிக இளவயதான எம்பாப்பேயை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது. இவர் தற்போது ஸ்பெயினின் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் கிளப்காக ஆடவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

வளரும் நட்சத்திரமான எம்பாப்பேயின் சர்ச்சை கருத்து : பதிலடி கொடுத்த மெஸ்ஸி... முழு விவரம் என்ன ?

இந்த நிலையில், அவர் தெரிவித்துள்ள கருத்து ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடைபெறவுள்ள யூரோ கால்பந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னாள் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகக்கோப்பையை விட யூரோ கால்பந்து தொடர்தான் கடினமானது என்று கூறியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது தென்னமெரிக்க நாடான அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, எம்பாப்பேக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "யூரோ கோப்பை முக்கியமான தொடர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் உலகக்கோப்பையை பலமுறை வென்ற தென்னமெரிக்க அணிகளான பிரேசில், அர்ஜென்டினா , உருகுவே போன்ற அணிகள் யூரோ கோப்பை தொடரில் இடம்பெறுவதில்லை. அனைத்து அணிகளும் பங்கேற்கும் உலகக்கோப்பை இதன் காரணமாக அனைத்தையும் விட சிறந்ததாக உள்ளது. இதனால்தான் அனைவரும் உலக சாம்பியனாக விரும்புகிறார்கள்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories