விளையாட்டு

"பும்ராவை அடிக்க முடிவு செய்ததுதான் தோல்விக்கு காரணம்" - பாகிஸ்தான் பயிற்சியாளர் ஒப்புதல் !

பும்ராவை ரிஸ்வான் அடிக்க முயன்று ஆட்டமிழந்ததே தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார்.

"பும்ராவை அடிக்க முடிவு செய்ததுதான் தோல்விக்கு காரணம்" - பாகிஸ்தான் பயிற்சியாளர் ஒப்புதல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூயார்க்கில் உள்ள Nassau County சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 19 ஓவரில் 119 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னரே ஆடிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி 8 ஓவர்களில் வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆனால் அதன்பின்னர் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களே குவிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்று குரூப் பிரிவில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

முதல் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்தே வெளியேறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், பும்ராவை ரிஸ்வான் அடிக்க முயன்று ஆட்டமிழந்ததே தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார்.

"பும்ராவை அடிக்க முடிவு செய்ததுதான் தோல்விக்கு காரணம்" - பாகிஸ்தான் பயிற்சியாளர் ஒப்புதல் !

இது குறித்து பேசிய அவர், "ஆட்டம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து நன்றாக செட்டில் ஆகியிருந்தார். அந்த சூழலில் தேவையில்லாமல் பும்ராவை அடிக்க முயன்று ஆட்டமிழந்தது நிச்சயம் தவறான முடிவு தான்.

பாலுக்கு பால் விளையாடினாலே வெற்றி என்ற நிலையில் எடுத்த தவறான முடிவால் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. இதுபோன்ற தவறுகளை செய்யும் போது, அதன் விளைவுகளையும் நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டும். ரிஸ்வான் மட்டுமல்லாமல் அணியாகவே நாங்கள் சில தவறான முடிவுகளை முக்கியமான நேரத்தில் எடுத்ததாக நினைக்கிறேன். எனினும் எங்கள் அணி இதிலிருந்து மீண்டு வரும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories