விளையாட்டு

"பாகிஸ்தான் போட்டியையும் ஒரு சாதாரண போட்டியாகதான் பார்க்கிறேன்" - ரோஹித் சர்மா கருத்து !

"பாகிஸ்தான் போட்டியையும் ஒரு சாதாரண போட்டியாகதான் பார்க்கிறேன்" - ரோஹித் சர்மா கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா நியூயார்க் மைதானத்தில் தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பாக்கிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த போட்டியில் என்ன செய்தோமோ எப்படி ஆடினோமோ அதையேத்தான் பாகிஸ்தானுக்கு எதிராகவும் செய்யப்போகிறோம். இந்தப் போட்டிக்கென வித்தியாசமாக எதையும் செய்யப்போவதில்லை.

பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் கடந்த டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேயிடம் தோற்றாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். அவர்கள் தாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்தியிருப்பார்கள். இப்போதெல்லாம் எல்லா அணிகளுமே நிறைய டி20 க்களில் ஆடுகிறார்கள். எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய வல்லமையோடு இருக்கிறார்கள்.

"பாகிஸ்தான் போட்டியையும் ஒரு சாதாரண போட்டியாகதான் பார்க்கிறேன்" - ரோஹித் சர்மா கருத்து !

முன்பெல்லாம் நான்கு ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பாகிஸ்தானுடன் ஆடுவோம். அதனால் அந்தப் போட்டிகள் பெரிதாகத் தெரிந்திருக்கலாம். இப்போது அப்படியில்லை. 7 மாதங்களுக்கு முன்புதான் அவர்களுடன் உலகக்கோப்பையில் ஆடியிருக்கிறோம். நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியையுமே மற்றுமொரு சாதாரண சர்வதேச போட்டியாகவே பார்க்க நினைக்கிறேன்.

நமது வீரர்கள் மனரீதியாக வலுவானவர்கள். அதனால்தான் 140 கோடி பேர்களிலிருந்து 11 பேரில் ஒருவராகத் தேர்வாகியிருக்கிறார்கள். உலகக்கோப்பையில் உங்கள் தேசத்துக்காக ஆடுகிறீர்கள் என்பதை விடப் பெரிய விஷயம் இருக்க முடியுமா? எனில் கை, கால், தலை என எங்கே அடிபட்டாலும் அதையெல்லாம் இரண்டாம்பட்சமாக வைத்துவிட்டு அணியை முன்னிலைப்படுத்தி போராடி நம்முடைய பணியை சிறப்பாக முடிக்க வேண்டும்.மற்ற மைதானங்களை போல நியூயார்க் மைதானத்தில் உள்ளே இறங்கியவுடன் அடித்து ஆட முடியாது"என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories