விளையாட்டு

"மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது" - முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து !

மும்பை அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

"மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது" -  முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.

"மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது" -  முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து !

அதோடு ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படாத மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வென்று தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் மும்பை அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "வெளியில் இருந்து நாம் பார்க்கும் போது மும்பை அணிக்குள் நிறைய விஷயங்கள் நடப்பது தெரிகிறது. அவர்களுடைய அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒன்றாக பேசி அணிக்காக சேர்ந்து விளையாடவில்லை என்பது நன்றாக தெரிகிறது.

பெரிய தொடரை வெல்ல வேண்டும் என்றால் ஒரு அணியாக சேர்ந்து விளையாட வேண்டும். ரோஹித் சர்மா சதமடித்து அல்லது பாண்டியா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அல்லது பும்ரா ஆகியோர் தனித்தனியாக ஆடினால் ஏதும் நடக்காது. தனிநபர்களால் கோப்பையை வெல்ல முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories