விளையாட்டு

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு இதுதான் காரணம் - கவாஸ்கர் கருத்து !

தென்னாப்பிரிக்காவில் பயிற்சி போட்டிகளில் ஆடாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு இதுதான் காரணம் - கவாஸ்கர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகக்கோப்பைத் தொடரின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் மோசமாக ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மட்டுமே அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் பயிற்சி போட்டிகளில் ஆடாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ” இந்திய அணியினர் தென்னாப்பிரிக்காவில் எந்த பயிற்சி போட்டியிலும் விளையாடவில்லை.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு இதுதான் காரணம் - கவாஸ்கர் கருத்து !

இங்கு நம்முடைய முதன்மை அணி பயிற்சி போட்டியில் விளையாட வேண்டும். அதனை செய்யாமல் நேரடியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது வேலைக்காகாது. இந்திய அணி தங்களுக்குள் பயிற்சிப் போட்டிகளில் ஆடியது. வேகப்பந்து வீச்சாளர்கள் உங்களுடைய பேட்ஸ்மேனுக்கு எதிராக அச்சுறுத்தக் கூடிய பவுன்சர்களை வீசுவார்களா?

நம்முடைய பவுலர்கள் நமது பேட்ஸ்மேன்கள் காயமடைந்து விடுவார்கள் என்று பவுன்சர்கள் வீச மாட்டார்கள். சீனியர்கள் முதல் 2 போட்டிகளில் சொதப்பினாலும் கடைசி 2 போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். ஆக பயிற்சி போட்டியில் ஆடாததற்கு பணிச்சுமை என்பது காரணம் இல்லை” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories